follow the truth

follow the truth

November, 24, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமுஸ்லிம்களதும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதி முயற்சி

முஸ்லிம்களதும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதி முயற்சி

Published on

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியான தலையீடுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்த ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான...

SJB தேசிய பட்டியலிலிருந்து தந்தையின் நீக்கப்பட்டுள்ளது ..- சமிந்திரானி

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

“SJB தேசியப்பட்டியலின் எஞ்சிய 4 எம்பிக்களும் திங்களன்றுக்கு முன்பாக பெயரிடப்படும்”

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும்...