ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து, அதன் ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.