தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணி வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் அதனால் மீண்டும் கொவிட் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படாதிருக்க குறித்த சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயம் என சுகாதார தரப்பு சுட்டிகாட்டியுள்ளது.
இன்று (01) இடம்பெற்ற கொவிட் −19 தடுப்புக்கான விசேட செயலணியில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.