எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் தோற்கடிக்கப்பட்டால் தோல்வியை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர் எங்கே தவறு செய்தார் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மக்களிடம் இருந்து கட்சி விலகிச் செல்ல முடியாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.