மின்சார கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சமர்ப்பிக்க பெப்ரவரி 15ஆம் திகதி வரை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி 1 முதல் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.