follow the truth

follow the truth

April, 20, 2025
Homeவிளையாட்டுஒரு நாளைக்கு 24 முட்டைகள் சாப்பிடும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்

ஒரு நாளைக்கு 24 முட்டைகள் சாப்பிடும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்

Published on

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், தனது தினசரி உணவில் 24 முட்டைகளை சேர்த்துக் கொள்வதாக தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தனது உணவு முறை குறித்து தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது உடல் வலிமையை மேம்படுத்த உணவுமுறையையும் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பயிற்சியாளரான அகிப் ஜாவேத் மூலம் இந்த புதிய உணவு முறை குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் இங்கே கூறியுள்ளார்.

அதன்படி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா 8 முட்டைகள் சாப்பிடுவதாக அவர் இங்கு கூறினார்.

பயிற்சிக்காக தமவ் கிரிக்கெட் அகாடமிக்கு வந்தபோது இந்த உணவு பழக்கம் ஏற்பட்டதாகவும், அங்கு கோழிப்பண்ணைக்குள் நுழைந்தது போல் தனது அறையில் ஏராளமான முட்டைகள் குவிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் தனது உடல் வலிமையை மேம்படுத்த இந்த உணவுமுறை முக்கியமானது என்றார். இந்த புதிய உணவு முறையால் தனது உடல் எடையை சுமார் 10 கிலோ வரை அதிகரிக்க முடிந்ததாக அவர் இங்கு கூறினார்.

பாகிஸ்தான் அணியின் வலைகளில் பயிற்சிக்காக Net Bowler ஆக பணியாற்றிய ரவூப், பின்னர் தனது திறமையை மேம்படுத்தி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளில் அணியின் வழக்கமான உறுப்பினராக ஆனார். ரவூப் 57 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...