மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதிக சதவீதத்தினால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.