சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA) நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவராவார்.
மகளிர் விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா வேகமாக முன்னேற்றி வருகிறது. 2021 நவம்பரில் பெண்கள் கால்பந்தாட்ட லீக் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
2026 ஆம் மகளிர் ஆசிய கிண்ண சுற்றுப்போட்டியை தனது நாட்டில் நடத்துவதற்கும் சவூதி அரேபியா விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.