நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி, இந்தியாவின் ஹிமாச்சால் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள சீமெந்து உற்பத்தி ஆலையை திடீரென மூட தீர்மானித்துள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் சீமெந்து தொழிற்சாலைகளை வாங்கியது.
ஆனால் சிறிது காலத்தின் பின்னர் சீமெந்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், அதானி நிறுவனத்துக்கும் கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அதிக போக்குவரத்து செலவுகளால் தொழிற்சாலைகள் நஷ்டம் அடைவதாக நிறுவனம் தெரிவிக்கின்றது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரியும் சுமார் 2,000-3,000 ஊழியர்களும், தினக்கூலிக்காரர்கள் என 10,000-15,000 பேரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீமெந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அப்பகுதி கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
எனவே, சீமெந்து போக்குவரத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். வெளிமாநிலங்களில் இருந்து சீமெந்து கொண்டு செல்ல லாரிகளை அனுமதிப்பதில்லை.
தற்போது ஒரு டன் சீமெந்துக்கு கிலோமீட்டருக்கு 11 இந்திய ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதை ரூ.6 ஆக குறைக்க வேண்டும் என்கிறது அதானி.