follow the truth

follow the truth

December, 25, 2024
Homeஉள்நாடுசந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

சந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

Published on

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதிப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (08) மதியம் ஸ்டேஸ் வீதி பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை எடுக்க முயன்றனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வசந்த ஹந்தபாங்கொட காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும்...

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான...

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – எதிர்க்கட்சித் தலைவர்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித...