குருநாகல் – பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு (எண் கோண மண்டபம்) தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அங்குள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக குருநாகல், பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் ஒன்றினை கையளித்திருந்தனர்.
உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான ‘தலதா மாளிகை’ கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.