எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது.
துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், ராஜித சேனாரத்ன, கபீர்ஹாசிம் போன்றவர்கள் இதில் அடங்குவதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்.
எஞ்சிய 4 அமைச்சுப் பதவிகளை பொதுஜன பெரமுன பெறவுள்ளதாகவும், கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அமைச்சுப் பதவிகளுக்காக முன்மொழிந்தவர்கள் இந்த நால்வரில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன வரம்பு மீறி போராட்டம் நடத்தினால், மார்ச் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி உத்தரவிடுவார் என்றும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.