follow the truth

follow the truth

April, 12, 2025
Homeஉலகம்உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம்

உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம்

Published on

‘ஓர்த்தடாக்ஸ்’ (‘Orthodox’)கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.

பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர், ரஷ்யா முழு போர் நிறுத்தத்தை தொடங்குவது இதுவே முதல் முறை.

கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்யாவின் ‘ஓர்த்தடாக்ஸ்’ (‘Orthodox’)மதத் தலைவரான 76 வயதான பிரத்யாஷ் கிரைலின் கோரிக்கையை மதிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் போர் நிறுத்தத்திற்கு தனது விருப்பத்தை தெரிவித்தார்.

‘Orthodox’ கிறிஸ்துமஸ் விழாவில் இரண்டு நாள் முழு போர்நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி புடின் விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து இரண்டு நாட்களுக்கு மட்டும் யுத்த நிறுத்தத்தை மட்டுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

‘Orthodox’ கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்துக்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எடுத்த முடிவு தவறான நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையான போர்நிறுத்தத்தை தொடங்குவதற்கு, ரஷ்ய துருப்புக்கள் அவர்கள் வலுக்கட்டாயமாக கைப்பற்றிய மாகாணங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...

அமெரிக்காவின் அடிமடியிலேயே கை வைத்த சீனா

சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால்...

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட்...