உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
அதனையடுத்து வழக்கை மீண்டும் பெப்ரவரி 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.