உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலாவெவ பிரதேச சபை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கு மட்டுமன்றி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யாவிட்டால், போராட வேண்டும் அல்லது வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மூன்று மாதங்களில் மத்திய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அதன் பின்னர் அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.