பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி வசந்த முதலிகே 2023 ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, இதற்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.