follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉள்நாடுயால'வில் இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு

யால’வில் இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு

Published on

யால தேசிய பூங்கா உட்பட இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு டொலர்களை சம்பாதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் முதலில் யால தேசிய பூங்காவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, யால பூங்காவிற்கு இந்த நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிதாக கட்டப்பட்ட இரண்டு சுற்றுலா பங்களாக்களின் பணிகள் முடிவடைந்துள்ளதால், அவை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம் வனத்துறை நிறுத்தப்பட்டு, பணிகளை உடனடியாக முடிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று...

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவரை தாக்கிய சம்பவம் – 07 பேருக்கு பிணை

ஹோமாகம, பிடிபனவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட ஸ்ரீ...

UPDATE : 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் - சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி - 5,553 வாக்குகள் -...