டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
அதுவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி, ரூ.420 ஆக இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை ரூ.405 ஆக இருக்கும்.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த காலப்பகுதியில் டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், டீசல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.