புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இன்று (3) நண்பகல் 12.00 மணிவரை 10 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக இன்று மாலை பல புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், பணி முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பல ரயில் பயணிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.