follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடு"ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம்"

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒருபோதும் கூட்டு சேரமாட்டோம்”

Published on

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமது கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கிறீர்களா என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்;

“இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒருபோதும் பேச மாட்டோம். காரணம், இடதுசாரிகளில் முற்போக்கான அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் என்று நம்புகிறோம். அதனால் நம்மை விட்டு பிரிந்த சிலர், எங்களை அங்கே தள்ள நினைத்தனர். எந்த நேரத்திலும் அத்தகைய நிலைக்கு செல்ல நாங்கள் தயாராக இல்லை” என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோழி இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடில்லை

பண்டிகைக் காலத்தில் கோழி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேவைக்கு...

அனைத்து மாணவர்களுக்கும் சலுகைகள் சமமாக வழங்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றதென...

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை...