பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 6 புதிய மாகாண ஆளுநர்களும் ஒரே நேரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தமையால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகியதாகவும், தற்போது அந்த விடயம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.