2023 ஆம் ஆண்டுக்கான அரச சேவையில் தரமான சேவையை வழங்குவதற்கான சேவை உறுதிமொழி இன்று (02) காலை வழங்கப்பட்டது.
அரச நிர்வாக அமைச்சில் நடைபெற்ற உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் அரச நிர்வாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.
அரச சேவையின் திசையை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என சில தொழிற்சங்கங்கள் கருதுவதாக அரச நிர்வாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.
நாள் முழுவதும் சமூக வலைதளங்களில் உலாவாமல், தனியார் துறையில் செல்போனை லாக்கரில் வைத்து மூடும் நிலைக்கு அரச பணித் துறையினையும் வைக்க வேண்டாம் என ஊழியர்களை பொது நிர்வாக செயலாளர் கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால் சுற்றறிக்கையை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.