ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (02) காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
களனிவெளி பாதை, கடலோர மார்க்கம், புத்தளம் மற்றும் பிரதான பாதைகளில் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் பற்றாக்குறையால் இன்று 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ஸ்டேஷன் மாஸ்டர் சங்கம் நேற்று (01) அறிவித்திருந்தது.
புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் காரணமாக நேற்று 30 பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.