நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு வருடத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு விசேட சந்தர்ப்பத்தை வழங்கியமையினால், அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால் அது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 17, 2024 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட்டால், நவம்பர் 17, 2023 க்குப் பிறகு அழைக்கப்படும் சூழ்நிலை உள்ளது.