follow the truth

follow the truth

March, 28, 2025
Homeஉள்நாடு"கட் இஷார" கைது

“கட் இஷார” கைது

Published on

ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டி வாயில் சுட்டுவிட்டு கடுவெல வெலிப்பில்லவ பிரதேசத்தில் விட்டுச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த “கட் இஷார” என்ற நபர் கொலன்னாவ, நாகஹமுல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருடன் 5 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கார், வாள், மன்னா கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாதம் 26ஆம் திகதி கடவத்தை மேல் பையன்வில மங்கட வீதியைச் சேர்ந்த ஹர்ஷ மதுஷன் ஜானக என்ற அஞ்சு என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கொலன்னாவ, நாகஹமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனு ஏப்ரல் 28 தீர்மானிக்கப்படும்

கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை தொடரலாமா,...

இளைஞர் சேவைகள் மன்ற ஊழல் அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் கையளிக்க தீர்மானம்

இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் கோப் குழு வெளிப்படுத்திய உண்மைகளின்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர்...