இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பேசிய பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் இன்று பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினார்.
ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பஹ்ரைன், லெபனான், ஜெனிவா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மத்தியில் கடந்த 26 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய இராஜதந்திரத்தை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய இராஜதந்திரிகள் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார், இது எதிர்கால இலங்கையை கடன்கள் மற்றும் உதவிகளில் இருந்து விடுவித்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.