உள்ளூராட்சி தேர்தலில் அலி – பொஹொட்டு கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்பதால் அரசாங்கம் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்கட்சிகள் அதற்கு எதிரான ஜனநாயக நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை நீதிமன்றத்தில் கூறப்போவதாகவும், ஆனால் தேர்தலுக்கு ஆறேழு ஆயிரம் கோடி செலவாகும் என்றும் தெரிவித்த மத்துமபண்டார, அரசாங்கத்தில் சிலரை நிறுத்தினால் பணத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை என்றார்.
மேலும், நாள்தோறும் அரசு பணம் அச்சிடுகிறது என்று கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், ஜனநாயகத்தை மதித்து மக்கள் கருத்துக்கு பணிந்தால், பாசாங்கு இல்லாமல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.