ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 08 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த பெரும்போக அறுவடையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 10,000 ரூபா மற்றும் 02 ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயரில் நெய்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்போது 760,000 இற்கும் அதிக ஹெக்டேயர் நிலப்பரப்பில் அறுவடை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.