திலினி பிரியமாலி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திலினி பிரியமாலி நிதிக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்த போது, இரண்டு தடவைகள் சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் சிறைச்சாலை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அந்த வழக்கிற்கு பிணை வழங்க உத்தரவிட்டார்
திலினி பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.