follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுமுட்டை விலை தொடர்பிலான அறிவிப்பு

முட்டை விலை தொடர்பிலான அறிவிப்பு

Published on

நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் சந்தைகளில் லொறிகள் மூலம் நாளை (28) முதல் வெள்ளை முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமும் 70 லட்சமாக இருந்த முட்டை உற்பத்தி தற்போது 35 முதல் 40 லட்சமாக குறைந்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு இடையில் சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் ஒரு முட்டை 70 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

ஒரு முட்டை உற்பத்தி செய்ய 46.00 ரூபா செலவாகும் என்றும், மொத்த வியாபாரிக்கு 49.50 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தால், மொத்த வியாபாரி சில்லறை விற்பனையாளருக்கு 53.00 ரூபாவுக்கு முட்டையை விற்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.

இதன்படி, சில்லறை விற்பனையாளர் 2.00 ரூபா இலாபத்தை வைத்து ஒரு முட்டையை 55.00 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு முட்டையை விற்பனை செய்யாமல், ஹோட்டல், பேக்கரிகளுக்கு 53.00 ரூபாவுக்கு மொத்த வியாபாரிகள் முட்டை விற்பனை செய்து வருவதும், இதனால் சந்தையில் செயற்கையாக முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...