இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல எனவும் அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வூப் பெற்ற ஜெனரால் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்