நாளை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு அன்றைய தினம் நாட்டில் சுனாமி அனர்த்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவருக்கும் தேசிய நிகழ்வாக இது வரையில் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடம் டிசம்பர் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் “தேசிய பாதுகாப்பு தினம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.