follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1வரலாற்று நகரமான பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்து வைப்பு

வரலாற்று நகரமான பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்து வைப்பு

Published on

துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா மேயர் அலினூர் அக்தாஸ், பர்சாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பர்சா ஆளுநரகத்தின் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அதிகாரபூர்வமாக 2021 செப்டம்பர் 25 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வரலாற்று நகரமான பர்சாவில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறப்பதன் மூலம் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கனவே இருக்கும் நட்புறவு மற்றும் சகோதர உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஹசன் தெரிவித்தார். மக்கள் தொகையின் அடிப்படையில் பர்சா துருக்கியின் 4வது பெரிய நகரமாவதுடன், ஒட்டோமான் பேரரசு அதன் முதல் இராச்சியத்தை அமைத்ததன் பின்னர் செழித்து வளர்ந்த பகுதியாக பொருளாதாரத்தின் இரண்டாவது பெரிய பகுதியாகவும் கருதப்படுகின்றது. பர்சாவின் கௌரவ துணைத் தூதுவராக அதிகாரப்பூர்வமாக திரு. அஹ்மத் யில்டிஸை தூதுவர் நியமனம் செய்தார். தனது கருத்துகளின் போது, இலங்கைக்கான புதிய வர்த்தக வாய்ப்புக்கள், சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பர்சா பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை திரு. யில்டிஸ் உறுதியளித்தார்.

பர்சா பெருநகர நகராட்சி மேயர் அலினூர் அக்தாஸ், ஏகே கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஃப்கான் ஆலா, பர்சா பெருநகரத்தின் பிரதி ஆளுநர் ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 08...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...