இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக நித்திஷ் ராணா ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அவேஷ் கான் 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.