கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதரும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டிற்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுத்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் இலங்கையில் வைத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே, இன்று நள்ளிரவு முதல் இவ்வழிகாட்டல் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் கெஹெலிய அறிவித்துள்ளார்.
Starting midnight tonight, 29/09, all arrivals at @BIA_SriLanka will no longer be subject to on arrival #PCR tests provided that the test done within 72 hours of departure is negative. Arrivals should be #FullyVaccinated with the 2nd dose administered 2 weeks prior to arrival.
— Keheliya Rambukwella (@Keheliya_R) September 28, 2021