மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் 60-70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், இலங்கையின் ஆடைத் தொழிலை உலகளவில் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வை ஆடைத்தொழிலால் தாங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் வியாபாரம் செய்வதற்கு போட்டியான சூழல் இருக்க வேண்டும் எனவும், டொலரின் பெறுமதியை கடைசி மின்சாரத்துடன் எடுத்துக் கொண்டால் இலங்கையில் உற்பத்திச் செலவு அதிகமாகும் எனவும் ஒன்றிணைந்த ஆடைகள் சங்க மன்றத்தின் (JAAF) செயலாளர் நாயகம் யோகன் லாரன்ஸ் தெரிவித்தார்.
மீண்டுமொருமுறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஆடைத் தொழிற்சாலைகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.