follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாடயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

டயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது, சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத்தால் இன்று (20) இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும், எனவே அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஓஷல ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்றும் தான் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும், நீதியினை நீதிமன்றம் வழங்கும் என்றும் அண்மைக்காலமாக டயனா கமகே பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...