பல்லைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் லெனின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாடசாலை, பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் பிக்கு மாணவர்கள் சம்பந்தமான சட்டத்தை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எமது நாட்டில் பல பொது பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரண தரம், உயர் தரம் மற்றும் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் முறை பரீட்சைக்கு தோற்றி தோல்வியடைந்தால், அவர்ளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க வேண்டும்.
உயர் தர பரீட்சையை இரண்டு முறை எழுதினால் போதும் அதன் பின்னர், அந்த பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கு தேவையான பிரஜைகளாக உருவாக்க வேண்டும்.
பல்லைக்கழகங்களில் இருக்கும் பிக்கு மாணவர்களுக்கும் அப்படியே செய்ய வேண்டும். இலங்கையில் சஹ்ரான் என்ற நபர் தாடி வளர்த்துக்கொண்டு இருந்தார். பலரை கொன்று அவரும் இறந்து போனார்.
சஹ்ரானை போன்று தாடி வளர்த்த பல்கலைக்கழக மாணவர்கள், நாட்டு மக்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் தாடி வளர்க்க ஆரம்பித்தனர். அத்துடன் பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் உட்பட ஏனைய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிக்கு மாணவர்கள் தாலிபான்களை போன்று செயற்படுகின்றனர்.
லெனின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வேலை செய்கின்றனர். அவர்களின் வழிக்காட்டி புத்த பகவான் அல்ல. தலைமுடி, தாடி வளர்த்துக்கொண்டு பிக்கு மாணவர்கள் இருக்கின்றனர்.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் உட்பட ஏனைய பல்கலைக்கழங்களின் பீடங்கள் மீட்கப்படாத வடமராச்சி என ஒரு பிக்கு கூறியிருந்தார் எனவும் வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர்