உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (18) நடைபெற உள்ளது.
இது பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான போட்டியாகும்.
அர்ஜென்டினா அணியை லியோனல் மெஸ்ஸி வழிநடத்தும் அதே வேளையில், சக்திவாய்ந்த பிரான்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு கைலியன் எம்பாப்பேவுக்கு உள்ளது.
இன்றைய இறுதிப் போட்டி லயோனல் மெஸ்ஸி விளையாடும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியாக அமையவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டி கத்தாரில் உள்ள லுசாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மைதானத்தில் 88,966 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டிகளைக் காணும் வாய்ப்பு உள்ளது.