கோழி இறைச்சி தட்டுப்பாடு காரணமாக 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை கடந்த சில நாட்களாக 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
பண்ணைகளில் கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதான் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்
கோழி தட்டுப்பாடு காரணமாக 90% சிறிய மற்றும் நடுத்தர கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளாந்த தேவையில் 30% கோழி சிறிய மற்றும் நடுத்தர பண்ணை உரிமையாளர்களால் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்தளவு தற்போது 20% ஆக குறைந்துள்ளதாகவும், மேலும் இந்தத் தொகை எதிர்காலத்தில் மேலும் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தற்போதைய சூழ்நிலையில் பெரிய அளவிலான பண்ணை உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களால் மட்டுமே கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படுவதாகவும், இதன் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.