கூகுள் தேடுதலிலை (Google Search) பயன்படுத்தி ‘SEX’ என்ற வார்த்தையை அதிக முறை தேடும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அண்மையில் டெய்லி சிலோன் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 12 மாதங்களில், கூகுள் தேடுபொறியில் இந்த வார்த்தை அதிக முறை தேடப்பட்ட நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வார்த்தை அவ்வளவு ஒன்றும் முறைகேடான வார்த்தை அல்ல என்றும் ஆபாச காணொளிகளை பார்வையிட வேண்டுமெனில் அதனை பார்வையிடுவதற்காக உள்ள பிரத்தியேக தளங்களுக்கு செல்வார்களே ஒழிய அதற்காக ‘Sex’ என்ற சொல்லில் தேட மாட்டார்கள் என இலங்கை திரைப்பட இயக்குனர், திரைப்பட விமர்சகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இலங்கை விளம்பரத்துறையில் ஆக்கப்பூர்வமான இயக்குனராகவும் உள்ள சிந்தன தர்மதாச தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பில் வினவும் பொது கருத்துத் தெரிவித்த சிந்தன தர்மதாச;
“… என்னுடைய ஆய்வும் ‘Faculty of Sex’ தான், அதற்காக நானும் தான் தினமும் ‘Sex’ எனும் சொல்லினை எனது அன்றாடத் ஆய்வுத் தேவைகளுக்காக தேடுகிறேன் (Search). நாளொன்றுக்கு குறைந்தது பத்து முறைக்கு மேலாவது ‘Sex’ என்ற சொல்லினை கூகிளில் தேடுவேன்.
அதாவது, ‘Sex’ தொடர்புடைய உலகளாவிய விடயங்கள், இப்போ நாம் ‘Sex’ என்று கூகிளில் தேடும் போது அதற்கான பரிந்துரைகளை (Suggestions) எங்களுக்கு காட்டும். அதனில் எமக்கு காணக்கூடிய ஒன்று தான், இந்நாட்களில் ‘Sex’தொடர்பில் அதிகளவு பேசப்படும் வளையங்கள், பகுதிகள், நாடுகள் என்று.. அல்லது அது தொடர்பிலான ஆய்வுகள், நோய்கள் இப்படி நிறையவே கூறலாம்.
அதைவிட்டு இலங்கையில் அதிகளவு கூகிள் தேடுதலில் ‘Sex’என்று தேடப்படுவது ஆபாச வீடியோக்களை மையமாக பார்க்கவல்ல.. இங்கு ‘Sex’ என்பதும் ‘Porn’ என்பதும் ஒரே அர்த்தமாக இருந்தாலும், அவை பொதுவான அறிவு ரீதியான பார்வையில் இரு வேறு விடயங்கள். ஒருவருக்கு ‘Sex’என்று தேடி ‘Porn’ ஆபாச வீடியோக்களையும் பார்க்கலாம். நான் இல்லை என்று கூறவில்லை. நானும் சில பாலியல் தொடர்புகள் உடைய காணொளிகள் எனக்கு தேவைப்படும் போது நானும் அவ்வாறு தேடிய நேரங்கள் உண்டு. இல்லை என்று கூறவில்லை.
என்றாலும் ‘Sex’ என்று தேடுவது ‘Porn’ என்பதற்கு தொடர்புபடாது.. இலங்கையில் ஒருவர் ‘Porn’ காணொளிகளை பார்ப்பவராக இருந்தால், அவர் தினமும் பார்வையிட ‘Porn’ தளங்களுக்கு சென்று பார்வயிடுவாரே தவிர ‘Sex’ என்று தேட மாட்டார். அவருக்கு தெரியும் அவர் பார்க்கும் ‘Porn’ எப்படிப்பட்டது என்று.. பொதுவாக ரேஸ் பந்தயத்தில் ஈடுபடுபவர் ஆங்கிலத்தில் ரேஸ் பத்திரிகை பார்ப்பது போல தான் .. அது ஒரு பொது அறிவு.
உண்மையில் சொல்லப்போனால் ‘Sex’ எனும் அறிவினை தேடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முன்னேறியுள்ளது. அது வரவேற்கத்தக்கது. இலங்கையில் பாலியல் கல்வி என்பது எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பது தான் எனது நிலைப்பாடு. அதல்லாது ‘Sex’என்று தேடி ஆபாச காணொளிகளை நூற்றுக்கு ஐந்து அல்லது பத்து பேர் அதனை பார்வையிடுபவர்கள் இருக்கலாம். அதனையும் தாண்டி மக்களுக்கு பாலியல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சனைகளை தேடும் போது அந்த ‘Sex’என்னும் வசனம் உபயோகிக்கப்படும்.
உண்மையிலேயே இலங்கையில் ‘Sex’ பற்றி என்னதான் தெரியும்?. அண்மையில் நான் தேடிய எனது ஆய்வுகளில் ஒன்றுதான் இலங்கையில் பெண்களின் பாலியல் உச்சகட்டம் குறித்த ஒரு ஆய்வு.. அதில் 60% – 70% வரையில் பெண்கள் உச்சம் கொள்வதில்லை, அது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு தரவு.. ஆனால் அது தொடர்பில் இலங்கையில் யாருக்கும் அது பற்றித் தெரியாது.. அது தெரியாது என்பதை விட அதைப் பற்றி பேசுவதற்குக் கூட பெண்கள் பயப்படுகிறார்கள். இந்த Orgasm இடைவெளி குறித்து யாரும் அலட்டுவதில்லை ஆனால் அது எமது அடிப்படை உரிமையினையும் தாண்டியதொரு விடயம். அது கட்டாயம், எம்மை கடவுள் அனுப்பியிருப்பது இனத்தினை பெருக்குவதற்கு அதெல்லாது வேறொன்றுக்குமல்ல..
அதையும் தாண்டி, குழந்தைப் பேருக்கான பாலியல் அறிவு, ஆண் பெண் என்பதைத் தாண்டிய திருநங்கை தொடர்பில் அறிவது இவை அனைத்தும் ‘Sex’ தான். நாட்டின் பொருளாதாரம் இந்தளவு கீழாகக் காரணம் ‘Sex’ இல்லாதது தான், ஏனெனில் நாம் எடுத்த அரசியல் தீர்மானங்களில் தான் இவ்வாறு நடந்தது. நமது மக்கள் தான் வாக்களித்தனர். அப்படி வாக்களித்தவர்கள் பாலியல் திருப்தி என்பதை அறியாதவர்கள் என்றே கூற வேண்டும்.
‘Sex’ ஊடாக பிள்ளை பெறுகிறார்கள், கருக்கலைப்பு செய்கிறார்கள், கருக்கலைப்பிற்கு இலங்கையில் தடையுள்ளது. அவ்வாறு இருக்க இனப்பெருக்கம் கூடுகிறது. பொருளாதரத்தில் அதுவும் தாக்கம் செலுத்தும் ஒன்று தான், பின்னர் அது அழுத்தமாக மாறும் சந்தர்ப்பங்களும் உண்டு, அவ்வாறு அழுத்தம் வரும் போது அரசியல் ஆசை வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு பொருளாதார வருமானத்திற்காக அவர்களது வேலைத்திட்டங்களை அனுசரித்து வாக்களிக்கின்றனர். அதையே நான் கூறினேன். நான் பொதுவான நடைமுறையினை கூறுகிறேன்.
இதற்கு சிறந்த உதாரணம் தான், சிங்கள இனத்தினை எடுத்துப் பாருங்களேன். தூய மரபணு என்று கூறுகிறார்கள். தூய மரபணு என்பதும் ‘Sex’ தான், ‘Sex’ தேவைப்படும் மனிதனுக்கு தூய மரபணு என்று ஒன்றில்லை அவன் யோசிப்பது பல்வேறு முறையில் மரபணு கலந்திருப்பதை தான். பன்முகத்தன்மை (Diversity) என்பது வேண்டும்.. அப்போது தான் நாடு முழுமையாகும். இதை வைத்துத் தான் கடந்த காலமாக அரசியல் நகர்ந்தது என்று கூறலாம். ராஜபக்ஷ ஆட்சி ஓடக் காரணமே இந்த சிங்கள – பெளத்த வாதம் என்ற கொள்கை தானே.. அவர்கள் பாலியல் என்ற ரீதியில் பயப்பட்டார்கள். நமது சிங்கள வர்க்கம் அழியும் என்று நம்பினார்கள்.. இந்த ‘Sex’ இற்கு தானே அடித்துக் கொண்டார்கள்.. சிங்களம் என்றும் சிங்ஹலே என்றும் ஆரம்பித்தார்கள். முற்றாக இவை ‘Sex’பிரச்சினை தான்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இதுவும் ஒருவிதத்தில் ‘Sex’பிரச்சினை தான். பல்கலைக்கழகத்தில் எவ்வாறு ‘Sex’பிரச்சினை பகிடிவதையாகலாம் என உங்களில் கேள்வி எழும். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் வருவார்கள். மனித உணர்வுகள் வித்தியாசம் தானே. அவர்களில் ஒரு தரப்பு காமத்தில் இருக்கலாம் மற்றைய தரப்பு அவர்களில் கல்வி நோக்கில் வெறியாக இருக்கலாம். இவர்கள் தரப்பு ஒன்று சேராது. யுவதி ஒருவரை பார்த்தால் அவளுக்கு ஒவ்வொரு விதத்தில் ஆடைகளை அணிவித்து பார்க்க வேண்டும், பாடச் சொல்லுவார்கள், நடக்கச் சொல்லுவார்கள் இதெல்லாம் ஆண் ஒருவனின் பாலியல் ஆசைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையே. அப்படி ஒன்று சேரும் போது தான் அது பகிடிவதையாக மாறுகிறது.
இலங்கையில் பாலியல் கல்வி என்பது என்ன என்றே தெரியாத நிலையில் தான் மாணவர்கள் உள்ளனர். பாலியல் கல்வி என்று கொண்டு வந்தார்கள். அது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நல்லதொரு விடயம். ஆனால் அதற்கு சில பிக்குமார்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆனால் மக்களை விடவும் அந்த பிக்குகளுக்கு தெரியாத ‘Sex’ என்று ஒன்றுமே இல்லை. இந்தக் கல்வி தேவையில்லை என்றார்கள்.
இப்போது கருக்கலைப்பு என்ற சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்றால் கட்டாயமாக கார்தினால் அவர்களும் களமிறங்குவார்கள். இப்படியிருக்க மக்களின் ‘Sex’என்ற உரிமையை மதக் குழுக்கள் கையிலெடுத்து ஆடுகிறார்கள். அவர்கள் ‘Sex’செய்யாதர்கள்.
‘Sex’ கட்டுப்பாட்டில் தான் மனிதனே கட்டுப்படும் என பிரபல அவுஸ்திரேலிய நரம்பியல் நிபுணரான Sigmund Freud என்பவர் கூறுகிறார். ‘Sex’என்பது பிள்ளை பெறுவது மற்றுமல்ல, காதலாக இருக்கலாம் மனித தேவையாக இருக்கலாம். காதல் என்பது ‘Sex’அல்ல அதனையும் இங்கே குறிப்பிட வேண்டும். காதல் என்பது மனிதனுக்கு மட்டும் குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஆனால் நான் உன்னுடன் ‘Sex’ செய்யப்போகிறேன் என்பது காதலிக்கிறேன் என்ற வார்த்தையோ அர்த்தமோ இல்லை. அதனையும் தாண்டிய தொன்று.
‘Porn’ பார்ப்பது என்பது தவறு என்று என்னால் கூற முடியாது நானும் அதற்கு அடிமை, நான் ஒரு பாலியல் ரீதியிலான ஒரு ஆய்வாளர். எனக்கு ஆசைகள் உண்டு அதனை திரைப்படத்தினுள் உள்ளடக்குவதற்காக… அது தவறாகவல்ல. உதாரணத்திற்கு பாலியல் காணொளி ஒன்றினை ஒளிப்பதிவு செய்யும் போது ஒளிப்பதிவாளரை பாராட்ட வேண்டும் அந்தக் கோணம், தருணம் அந்தக் கலை அது வேறொரு கலையாக இருக்கும். அப்படியிருக்க ஆபாசக் காணொளிகளை தினமும் பார்ப்பதால் மன விரக்தியடையும் அது மிகவும் ஆபத்தானது. அதையும் தாண்டி பாலியல் குற்றங்களும் இடம்பெறுகின்றன. அதனை என்னால் மறுக்க முடியாது. அதனை பார்க்கும் விதத்தில் தான் அனைத்தும் உண்டு. எம்மை கட்டுப்படுத்திக் கொள்ள நாம் தெரிந்திருக்க வேண்டும்…”
தமிழில் : ஆர்.ரிஷ்மா