follow the truth

follow the truth

November, 25, 2024
Homeவணிகம்புத்தம் புதிய மொபைல் ஃபோன்களை வழங்கும் Airtel

புத்தம் புதிய மொபைல் ஃபோன்களை வழங்கும் Airtel

Published on

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka நிறுவனம், 2022 டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் 50,000 ரூபா பெறுமதியான மொபைல் ஃபோன் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும் ‘Airtel Smartphone Bonanza’ வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Smart தொலைபேசிகளின் இறக்குமதி முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி 300 ரூபாவுக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் ஒவ்வொரு எயார்டெல் வாடிக்கையாளரும் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு தகுதி பெறுவார்கள், இவ்வாறு தகுதி பெற்ற வாடிக்கையாளர்கள் தினசரி குலுக்கல் முறையில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் இந்த Airtel Smartphone Bonanza திட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு எயார்டெல் குழுவினர் நேரடியான அழைப்பை மேற்கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவிப்பார்கள்.

இலங்கையின் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இதேபோன்ற வலையமைப்புகளில் வாடிக்கையாளர்களுக்காக புதிய தயாரிப்புகளை முன்கூட்டியே அடையாளம் கண்டுகொண்டு அதனை வழங்கும் வகையில் வரையறையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் எந்த வலைப்பின்னலுக்கும் வரையறையற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் எயார்டெல் ஆகும். Airtel Freedom அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Airtel நிறுவனம் அதன் பாவனையாளர்களுக்கு அவர்களின் Voice Calls, SMS மற்றும் Data தேவைகளுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது. ஏனைய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை விட சிறந்த சேமிப்பு வாய்ப்புகளையும் வழங்குகிறது. Unlimited Package களை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கையில் புரட்சிகரமான தொலைத்தொடர்பு சேவை துறையில் Airtel Lanka முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர் ஷொப்பிங் அனுபவத்திற்கான பிரத்தியேக காட்சியறையை திறந்துள்ளது Fashion Bug

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இயங்கி வந்த அதன் பிரத்தியேகமான...

அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு...

இலங்கையின் வங்கித் துறையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கியின் பல சாதனைகள்

இலங்கையின் வங்கித் துறையில் அதன் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கி பல...