ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கல்வியை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி தவணையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.
இதனை தவிர நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களை 120 வலயங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
கல்வி வலயங்களின் எண்ணிக்கையை அதிகரித்த பின்னர் ஆசிரியர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்ப்பது இலகுவாக இருக்கும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.