follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1"எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போலவே உள்ளது''

“எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போலவே உள்ளது”

Published on

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயம் பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் கடனை செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவேன் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கார் உதிரி பாகங்கள் விநியோக நிலையத்தை இன்று (டிசம்பர் 14) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

போருக்குப் பின்னரான பொருளாதார வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாமையால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து அடுத்த வருடத்திற்குள் பொருளாதாரம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டுக்கு முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வரக்கூடிய நிறுவன அமைப்பு ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க;

“இன்று வியட்நாமின் பொருளாதாரம் ஃபார்முலா ஒன் பந்தயக் கார் போன்றது. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது. சிங்கப்பூரில் நாம் எப்படி பந்தயத்தில் ஈடுபடப் போகிறோம்? மற்ற நாடுகளில் ஃபார்முலா ஒன் பந்தய கார்கள் உள்ளன. நாமும் முச்சக்கர வண்டியில் சென்று போட்டியிடலாம். இது மக்கள் தினசரி பயணம் செய்வது நல்லது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நன்றாக இருக்கிறது என்று மீண்டும் சொல்கிறேன். ஆனால் பந்தயத்திற்கு அது சரியாகப் போவதில்லை. நாம் எப்படி வெல்வது? அந்த போட்டிக்கு நாம் ஒரு பந்தய கார் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நல்ல இயந்திரம் இருக்க வேண்டும். அதாவது நல்ல பொருளாதாரம். அதுதான் இப்போது நாம் கட்டிக் கொண்டிருக்கும் பொருளாதாரம்.

இந்த நாட்டில் திறந்த பொருளாதாரத்தை உருவாக்கி அந்த இயந்திரத்தை உருவாக்குகிறோம். போட்டி ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடும் வகையில் இந்த பந்தய கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை வெல்லும் திறமை உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

முதலில், நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதாரம், அத்துடன் சமூக நீதியான பொருளாதாரம், அத்துடன் போட்டித்தன்மையுள்ள ஏற்றுமதிப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. பழைய முறைகளில் பழகியவர்கள் இதை எதிர்க்கலாம். ஆனால் நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். நீங்கள் பந்தய காரில் செல்ல விரும்புகிறீர்களா? சைக்கிலிலா? என்னிடம் சொல்லுங்கள் ஏனென்றால் எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது.”

பலகையை திரைநீக்கம் செய்து டொயோட்டா கார் உதிரி பாகங்கள் விநியோக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. டொயோட்டா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...

அஸ்வெசும விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...