உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அர்ஜென்டினா அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து விடைபெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரும் 18ம் திகதி நடைபெற உள்ளது.
அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் 2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் இவ்வாறு விடைபெறுவது பொருத்தமானது என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, உலகின் கவனம் சூப்பர் வீரர் மெஸ்சி பக்கம் திரும்பியது.
அதற்குக் காரணம் அவருடைய அபாரமான போட்டிப் பாணிதான்.
அர்ஜென்டினா அணி 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.