அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
விமான பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.