பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்காக 34,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று முதல் 90,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று நாளை(13) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.