தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும் நிலையில், குறித்த அறிக்கையில் அமைச்சருக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எண்ணெய் படலம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீரின் மாதிரிகளும் விசாரணை குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தியவன்னா ஓயாவுக்கு நீர் வழங்கம் புத்கமுவ கால்வாயில் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் வடிகாலமைப்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன் காரணமாக பக்ற்றீரியா மற்றும் பாசிகளின் வளர்ச்சியால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.