ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கண்டியில் வளி மாசுபாடு அதிகமாக காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கண்டி நகரின் அமைவிடமும், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், புதைபடிவ எரிபொருட்கள் எரியும் அதிகரிப்பும் இந்நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு இலங்கையையும் பாதித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இந்திய காற்று துகள்கள் நாட்டிற்கு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இந்த நிலை மறைந்துவிடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.