பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (09) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, குறித்த வரிச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்தார்.